Screen Reader Access     A-AA+
Government of Tamil Nadu
Hindu Religious & Charitable Endowments Department
×
Devotee Registration
குறிப்பு :
இந்த முன்பதிவு பின்வரும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த முடியும் :
1. விண்ணப்பதாரர் இந்து சமயத்தை சேர்ந்தவராகவும், இந்து சமய நம்பிக்கை கொண்டு நடப்பவராகவும் இருத்தல் அவசியம்.
2. இம் முன்பதிவானது 21.04.2024 அன்று இத்திருக்கோயிலில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்க விரும்புபவர்களில் குலுக்கல் முறை தேர்வுக்கு இசைவு அளிப்பவர்களுக்கு மட்டுமே.
3. விண்ணப்பதாரர் தகவல்கள் திருக்கோயிலின் வளர்ச்சி, பயன்பாட்டிற்கு தரவாக பயன்படுத்த இசைவு அளிப்பவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
4. இந்த இணையவழி விண்ணப்பம் 13.04.2024 அன்று இரவு 9 மணி வரை மட்டுமே. அதன்பின் விண்ணப்பம் பதிவேற்றுதல் இயலாது.
5. விண்ணப்பதாரர், ரூ.500/- முகமதிப்பு கொண்ட ஒன்று அல்லது இரண்டு கட்டணச்சீட்டுகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர். எனவே தவறாமல் ஒன்று அல்லது இரண்டு கட்டணச்சீட்டு தேர்வு செய்ய வேண்டும்.
6. குலுக்கல் முறையில் கட்டணச்சீட்டு பெற தேர்ந்தெடுக்கப்படுபவர் இரண்டு சீட்டுக்கள் பெற அனுமதிக்கப்படுகையில், உடன் அழைத்து வருபவரின் ஆதார் நகல், தொலைபேசி எண்ணை சமர்ப்பித்து கட்டணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
7. விண்ணப்பதாரர் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதியானது இத்திருக்கோயிலின் சட்டத்திட்டங்களுக்குட்பட்டும், இந்து சமய பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டும் நடந்து கொள்பவராக இசைவு அளிப்பதாகக் கருதப்படுவதன் அடிப்படையிலேயே வாங்கப்படுகிறது.
8. குலுக்கல் முறையில் அனுமதிச் சீட்டுப் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட விவரம் குறுஞ்செய்தியாக (மின்னஞ்சல் முகவரி அளித்திருந்தால் மின்னஞ்சல் முகவரிக்கும்) அனுப்பப்படும். அவர் 20.04.2024 அன்று இரவு 8 மணி வரை, கட்டணச்சீட்டுக்கான உரிய தொகையை நேரடியாக திருக்கோயில் மேற்கு கோபுரம் எதிரே அமைந்துள்ள பிர்லா தங்கும் விடுதியில் உள்ள அலுவலகத்திற்கு வந்து செலுத்தி, விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றுகளைக் காட்டித் தங்களின் அசல் கட்டணச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
9. ரூ.500/- மதிப்புக்கான கட்டணச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர் ரூ.200/- மதிப்புக்கான கட்டணச்சீட்டுக்கு விண்ணப்பிக்க இயலாது.
10. விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பித்தல் இயலாது.

Registration Closed.