Arulmigu Subramaniya Swamy Temple, Engan - 612603, Thiruvarur District [TM014311]
×
Temple History
தல பெருமை
சோழவளநாட்டில் முதலாம் ராஜராஜசோழனால் பெயர் சூட்டப்பெற்றதும் , எண்கண் நாட்டு
எண்கண் என்கிற பவித்திரமாணிக்க சதுர்வேதிமங்கலம் என முற்காலத்தில் புகழ்பெற்றதும் , மனுநீதிச்சோழனின் தலைமை அமைச்சரான உபயகுலமாலன் பிறந்ததும் சிம்மவர்மனுக்கு
ஆறுமுகத்தோடு எழுந்தருளி வேலவன் காட்சியளித்ததும், சில்ப முனிவர் சித்தராகி அடங்கியதும் ,அருணகிரிநாதரால் பெரிதும் சிறப்பிக்கப் பெற்றதும் தஞ்சை பெருவுடையார் கல்வெட்டில் சத்தியாசிகமணி வளநாட்டு எண்கண் நாட்டு எண்கண் எனக்...சோழவளநாட்டில் முதலாம் ராஜராஜசோழனால் பெயர் சூட்டப்பெற்றதும் , எண்கண் நாட்டு
எண்கண் என்கிற பவித்திரமாணிக்க சதுர்வேதிமங்கலம் என முற்காலத்தில் புகழ்பெற்றதும் , மனுநீதிச்சோழனின் தலைமை அமைச்சரான உபயகுலமாலன் பிறந்ததும் சிம்மவர்மனுக்கு
ஆறுமுகத்தோடு எழுந்தருளி வேலவன் காட்சியளித்ததும், சில்ப முனிவர் சித்தராகி அடங்கியதும் ,அருணகிரிநாதரால் பெரிதும் சிறப்பிக்கப் பெற்றதும் தஞ்சை பெருவுடையார் கல்வெட்டில் சத்தியாசிகமணி வளநாட்டு எண்கண் நாட்டு எண்கண் எனக் குறிப்பிட்டுள்ளதும் , சில்ப முனிவர் இழந்த கட்டை விரலையும் , இருகண்களையும் வேலவன் அருளால் பெறப்பட்டதும்
, தலம் மூர்த்தி தீர்த்தம் சிறப்புகளைக்கொண்ட திருத்தலம் எண்கண் ஆகும் .
காலசந்தி பூஜைக்காக விளக்கு ஏற்ற ராஜராஜசோழனின் நிபந்தம் பெற்றதும் கி .பி 1219யில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் பிரமபுரிஸ்வரர் முன் எரியும் விழாக்களுக்கு விளக்கெரிக்க உபயம் ஏற்படுத்தியதும் , சிம்ம வரம மன்னனுக்கு பேணிக்காத்ததும் , மூன்றாம் குலோத்துங்கனால் கற்றுளி எழுப்பப் பெற்றதும் ஆகிய சிறப்புகளைக்கொண்டது இத்திருக்கோயில்
முத்தரச சோழன் சிக்கலில் கட்டை விரலை எடுத்து , எட்டுக்குடியில் கண்களை பறிக்க , வேலவன் அருளால் சில்ப முனிவர் திரும்பப் பெற்றதும் பிரம்மன் படைப்பு ,தொழிலை இழந்தபின் பிரமபுரிஸ்வரர் பூஜிக்க , இறைவன் முருகனை பணிக்க , வேலவன் பிரம்மாவுக்கு ஞானபதேசம் செய்து படைப்பு தொழிலை திரும்ப அளித்ததும் , ஆண்டுதோறும் நான்கு நாட்களுக்கு சூரியபகவானால் பூஜிக்கப்பட்டு வருவது ஆகிய சிறப்புகளை உ டையவர் இறைவன் ஆறுமுகத்தோடு பண்ணிருக்கரத்தோடு , மயில்மேல் அமர்ந்து வள்ளி தேவசேனா சமேதராய் அருங்காட்சி தரும் .