Screen Reader Access     A-AA+
அருள்மிகு முருகன் திருக்கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில் - 625301, மதுரை .
Arulmigu Murugan Temple, Solaimalai Mandapam, Alagarkovil - 625301, Madurai District [TM032124]
×
Temple History

தல வரலாறு

ஒவ்வொரு வீட்டினும் ஒவ்வொரு திருவிளையாடலைப் புரிந்து உவந்த முருகக்கடவுள். இப்படை வீட்டிலும் நிகழ்த்தி மகிழ்கின்றார். இங்கு எம்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் பழம் உதிர்த்த திருவிளையாடலாகும். பழங்காலத்தில் இத்தலம் மதுரைக்குச் செல்லும் வழியில் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அந்த வழியாக ஒளவை மூதாட்டியார் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் முருகக்கடவுளிடத்தில் நீங்கா அன்பு கொண்டவர். சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களாலும் ஒப்ப மதித்துப் போற்றப்பட்ட முத்தமிழ் வித்தகர். தமிழ் நலம் காரணமாகவும். அன்பின் நிறம் காரணமாகவும் முருகப்பெருமான். ஒளவை மீது இரக்கம் கொண்டார். அம்மூதாட்டிக்கு அருள் புரியத்திருவுள்ளங்கொண்டார். அருள் புரிவதன் வாயிலாக உலகுக்குப் பல நீதிகளை உணர்த்தும் குறிப்புக் கொண்டார். தமிழ் மூதாட்டியாகிய ஒளவை. கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கிச்சென்று கொண்டிருந்தார். ஒளவையின்...

தல பெருமை

முருகப்பெருமான் தெய்வப்புலவர் அவ்வையாரின் புலமையை சோதனை செய்ய எண்ணி மாடுமேய்ப்பவர் வேடத்தில் வந்து நாவல்மரத்தில் மேல் அமர்ந்துகொண்டு பாட்டிஉனக்கு சுட்டப்பழம் பழம்வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்க அவ்வையாரோ பழத்தில் என்ன சுட்டப்பழம் சுடாத பழம் இருக்கிறது என எண்ணி சுடாத பழமேகொடு எனக் கேட்க முருக பெருமான் நாவல் மரக்கிளையிலிருந்து நாவல் பழங்களை உதிர்த்துவிட அதனை ஔவையார் எடுத்து நாவல் பழத்தில் ஒட்டியிருந்த மண்ணை ஊதியவுடன் முருகப்பெருமான் பாட்டி என்ன பழம் சுடுகிறதா எனக் கேட்டார் உடனே கருங்காலி கட்டை போன் ற என்னை இந்த மாடு மேய்க்கும் சிறுவன் பரிசோதித்து விட்டானே என நினைத்து யாரப்பா நீ என வினவ தான் வந்திருப்பது முருகன் என்று ம் உம்மை...

இலக்கிய பின்புலம்

இளம் பெருவழுதியர், நக்கீரர் ,அருணகிரிநாதர், ஸ்ரீமத் குமரகுருபர ஸ்வாமிகள் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.