Screen Reader Access     A-AA+
அருள்மிகு கரபத்ர சுவாமிகள் மடம், வியாசர்பாடி, சென்னை - 600039, சென்னை .
Arulmigu Karabathira Samy Temple, Vysarpadi, Chennai - 600039, Chennai District [TM000010]
×
Temple History

தல வரலாறு

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் (ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம்) என்பது வடசென்னைலுள்ள, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள மடாலயம் ஆகும். இம்மடாலயத்திலுள்ள கல்வெட்டில் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள் கலியுகாதி 5019-ஆம் ஆண்டு பிங்கள வருடம் பங்குனி மாதம் 22-ம் நாள் (4-4-1918) குருவாரம் உத்திராட நக்ஷ்த்திர நன்னாளில் விதேககைவல்லியம் அடைந்தார்கள் அன்னவர்களின் சமாதி கர்பக்கிரகத்தில் அமைந்துள்ளது. அதன் மீது பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது என்றும் ஸ்ரீலஸ்ரீ முத்தானந்த சுவாமிகள் கலியுகாதி 5060-ஆம் ஆண்டு விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 8-ஆம் தேதி (24-10-1958) வெள்ளிக்கிழமை உத்திராட நக்ஷ்த்திர நன்னாளில் விதேககைவல்லியம் அடைந்தார்கள் அன்னவர்கள் சமாதி முன்மண்டபத்தில் அமைந்துள்ளது. அதன்மீது பலீபீடம் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது என்று பதிவு...