Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணிசுவாமி திருக்கோவில், Elkhill, Ooty - 643001, நீலகிரி .
Arulmigu Jalakanteshwarar Baladhandayuthapani Swami Temple, Elkhill, Ooty - 643001, Nilgiris District [TM010026]
×
Temple History

தல வரலாறு

உதகையில் வாழ்ந்த அன்பர் இருவர் ஆண்டு தோறும் பழனி சென்று ஞான வள்ளலாய் விளங்கும் தண்டபாணிப்பெருமானை வணங்குவது வழக்கம் தளர்ச்சி மிகுதியாலோ வேறு காரணங்களினாலோ ஒருமுறை பழனி போக முடியவில்லை பழனிப் பெருமாள் அவர்கள் கனவில் தோன்றி தாம் உதகை நகரில் இந்தக் குன்றிலே உறைவதாகவும் இங்கேயே வழிபடுமாறும் அருள் பாலித்தார். கனவில் முருகப்பெருமான் குறிப்பிட்ட இடம் எல்க் என்னும் ஒருவகை மான் கூட்டம் கூட்டமாக வசித்த குன்றுப் பகுதி.அதனால் எல்க் ஹில் எனப் பெயர் பெற்று விளங்கும் இப்பகுதியில் இருவரின் உதவியோடு தற்போதுள்ள இக்கோயில் உருவாகியதாகச் சொல்லப்படுகிறது.இத்தலத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள முருகனின் திருமேனி பழனி முருகன் திருமேனியைப் போன்றே உள்ளது.