சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு காந்தல் பகுதியில் கசவர் இன மக்கள் வசித்து வந்துள்ளனர். இம்மக்கள் மலைப் பகுதிகளில் வசிப்பதால் காட்டு விலங்குகளிடமிருந்தும், விசப்பூச்சிகளிடமிருந்தும் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒரு சிறிய மேடையில் சுயம்புவை பிரதிஸ்டை செய்து அதை அம்மனாக பாவித்து வணங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வாப்சர் என்ற ஆங்கிலேயதுரை காந்தலில் வசிக்கும் தனது தந்தையை பார்க்க குதிரையில் வந்தார். குதிரை கோயில் அருகே வந்தவுடன் திடீரென்று நின்றுவிட்டது. அப்போது எதிரே வெள்ளை சேலை அணெிந்த பெண்மணி ஒருத்தி நடந்து வந்து கொண்டிருந்தாள், அந்தப்பெண்ணை பார்த்ததும் வாப்சர்துரை அவரை அறியாமல் குதிரையில் இருந்து இறங்கிவிட்டார். அவரது இரு...சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு காந்தல் பகுதியில் கசவர் இன மக்கள் வசித்து வந்துள்ளனர். இம்மக்கள் மலைப் பகுதிகளில் வசிப்பதால் காட்டு விலங்குகளிடமிருந்தும், விசப்பூச்சிகளிடமிருந்தும் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒரு சிறிய மேடையில் சுயம்புவை பிரதிஸ்டை செய்து அதை அம்மனாக பாவித்து வணங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வாப்சர் என்ற ஆங்கிலேயதுரை காந்தலில் வசிக்கும் தனது தந்தையை பார்க்க குதிரையில் வந்தார். குதிரை கோயில் அருகே வந்தவுடன் திடீரென்று நின்றுவிட்டது. அப்போது எதிரே வெள்ளை சேலை அணெிந்த பெண்மணி ஒருத்தி நடந்து வந்து கொண்டிருந்தாள், அந்தப்பெண்ணை பார்த்ததும் வாப்சர்துரை அவரை அறியாமல் குதிரையில் இருந்து இறங்கிவிட்டார். அவரது இரு கைகள் அந்த பெண்ணைப் பார்தது வணங்கியவாறே இருந்தது.
அந்த பெண் வீதியில் இருந்து இறங்கி சிறிய மேடையில் எழுந்தருளிய கோயிலுக்குள் சென்று திடீரென்று மறைந்துவிட்டார்.இந்த நிலையில் வெளியே குதிரையுடன் நின்றிருந்த வாப்சர்துரைக்கு நீண்ட நேரம் கழித்து தான் சுயநினைவு வந்துள்ளது. உடனே அய்யோ ஒரு பெண் இந்த சின்னஞ்சிறு ஆலயத்திற்குள் சென்று திடீரென்று மறைந்து வட்டாளே என்று கோயிலுக்குள் சென்று தேடிப்பார்த்துள்ளார்.அங்கே சிறிய சுயம்புவை தவிர வேறு யாரும் இல்லை. பின்னர் வீடு திரும்பிய அவர் தனது தந்தையிடம் நடந்த விவரத்தை எடுத்துரைத்தார். அப்போது அவரது தந்தை இது பற்றி அங்கு வசிக்கும் கசபர் இன மக்களிடம் கேட்டார். இதை கேட்ட கசவர் இன மக்கள் தாங்கள் வழிபடும் அம்மனே அது என்று குறிப்பிட்டனர்.
இதன் பின்னர் ஒருநாள் வாப்சர்துரை கனவில் அன்னை அதே வெள்ளை சேலையில் தோன்றி மகனே அனைத்து உலகையும் ஆட்சி புரியும் பராசக்தி நானே, யாமே உமக்கு காட்சி தந்தோம். எமக்கு ஒரு ஆலயம் கட்டி வழிபடு என்று கூறி மறைந்துள்ளார். இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த வாப்சர் துரை மறுநாள் கோவிலுக்கு வந்து அவரே செங்கற்களால் சுவர் எழுப்பி மூங்கில் தட்டி போட்டு கோயில் எழுப்பி சுயம்பிற்கு பதிலாக தான் கனவில் கண்ட அம்மனை உருவத்தை விக்கிரகமாக அமைத்து வழிபட்டு வந்துள்ளார். மூவுலகையும் ஆட்சி புரிபவள் அன்னை பராசக்தி எனவே அன்னை மூவுலகரசியம்மன் என்னும் திருநாமத்தில் அழைக்கப்பட்டுவருகிறார். இது செவி வழி செய்தியாகவே இன்று வரை இப்பகுதியில் பரவிவருகிறது. இதன் பின்னர் 1860 ஆம் ஆண்டு ஊர் மக்கள் கூடி விநாயகர் சன்னதி அமைத்து வழிபட்டுள்ளனர். 1895 ஆம் ஆண்டு நாராயணப்பிள்ளை என்பவர் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கோவில் கோபுரம், மூலதன மண்டபம், நவகிரகங்கள் அமைத்து கும்பாபிஸேகம் நடத்தியுள்ளார். அதைத்தொடந்ந்து 1992 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.