அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயில், Avinashi - 641654, திருப்பூர் .
Arulmigu Avinashilingeswarar Temple, Avinashi - 641654, Tiruppur District [TM010055]
×
Temple History
தல வரலாறு
ஊழிக் காலத்தில் தேவர்கள் அஞ்சி புகுந்ததனால் திருப்புக் கொளியூர் (விநாசம் இல்லாததால்) அழியாத தன்மையுடையது.
வாரணவாசியில் இருந்து ஒரு கிளை விட்டு தென்பகுதியில் கொங்குவளநாட்டில் காஞ்சிமா நதியின் தென்புறம் வேர் ஒன்று சுயம்பாக அவிநாசியப்பர் என்ற திருநாமத்துடன் வெளிப்பட்டது.
சுவாமியின் வேர் வரும்போது கூபம் வடிவில் கங்கை நதி வந்ததாக வரலாறு.
பார்வதி தேவி வலப்பாகம் வேண்டி பாதிரி மரம் அடர்ந்த இவ்வூரின் பாதிரி வனத்தில் 1000 ஆண்டுகள் தவமியற்றி பெருங்கருணாம்பிகை என்னும் நாமத்துடன் வலப்பாகம் பெற்றார்.
பிரம்மன் ஐராவதம் என்னும் வெள்ளை யானை தாடகை, வியாதவேடர்கள், சங்ககண்ணன், யக்ஞகுப்தன், காகம் மற்றும் தருமசேன மகாராஜா ஆகியோர் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம்.
இவ்வூரில் வாழ்ந்த கங்காதரசர்மா வேதபதுமை தம்பதிகளின் குமாரன் அவிநாசிலிங்கம் மற்றும் அவனது நண்பர் தாமரைக்குளம் என்னும்...ஊழிக் காலத்தில் தேவர்கள் அஞ்சி புகுந்ததனால் திருப்புக் கொளியூர் (விநாசம் இல்லாததால்) அழியாத தன்மையுடையது.
வாரணவாசியில் இருந்து ஒரு கிளை விட்டு தென்பகுதியில் கொங்குவளநாட்டில் காஞ்சிமா நதியின் தென்புறம் வேர் ஒன்று சுயம்பாக அவிநாசியப்பர் என்ற திருநாமத்துடன் வெளிப்பட்டது.
சுவாமியின் வேர் வரும்போது கூபம் வடிவில் கங்கை நதி வந்ததாக வரலாறு.
பார்வதி தேவி வலப்பாகம் வேண்டி பாதிரி மரம் அடர்ந்த இவ்வூரின் பாதிரி வனத்தில் 1000 ஆண்டுகள் தவமியற்றி பெருங்கருணாம்பிகை என்னும் நாமத்துடன் வலப்பாகம் பெற்றார்.
பிரம்மன் ஐராவதம் என்னும் வெள்ளை யானை தாடகை, வியாதவேடர்கள், சங்ககண்ணன், யக்ஞகுப்தன், காகம் மற்றும் தருமசேன மகாராஜா ஆகியோர் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம்.
இவ்வூரில் வாழ்ந்த கங்காதரசர்மா வேதபதுமை தம்பதிகளின் குமாரன் அவிநாசிலிங்கம் மற்றும் அவனது நண்பர் தாமரைக்குளம் என்னும் தடாகத்தில் நீராட சென்றபோது அவிநாசிலிங்கத்தை முதலை விழுங்கியது.
மூன்றாண்டுகளுக்கு பின் அவிநாசிலிங்கத்தின் நண்பனுக்கு உபநயனம் நடந்தது. அதுசமயம் அவிநாசியப்பரை வழிபட சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது பரிவாரங்களுடன் திருப்புக்கொளியூர் அடைந்தபோது ஒரு வீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகுரலும் கேட்டது. அவிநாசிலிங்கம் பெற்றோர்களை சந்தித்து விவரமறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் குளக்கரைக்கு சென்று `எற்றான் மறக்கான் என்று தொடங்கும் தேவாரப் பதிகம் பாடி மூன்றாண்டுக்கு முன் முதலையுண்ட பாலகனை மூன்றாண்டு வளர்ச்சியுடன் வரவழைக்க அற்புதம் நடத்திய தலமாகும்.