Screen Reader Access     A-AA+
அருள்மிகு கந்தபெருமான் திருக்கோயில், Konganagiri, திருப்பூர் - 641602, திருப்பூர் .
Arulmigu Kandhaperumal Temple, Konganagiri, Tirupur - 641602, Tiruppur District [TM010075]
×
Temple History

தல பெருமை

திருப்பூர் அருகில் சிறு குன்றின் மீது சுயம்புவாக தபஸ் குமாரசுவாமியாக கந்தன் கோயில் கொண்டிருக்கும் அற்புதமான தலம். கொங்கண சித்தரால் இக்கோயில் நிர்மாணிக்கப்பட்டதாகவும் கூறுகின்றார்கள். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலம். கருவறையில் முருகர் வள்ளி, தெய்வானை தேவியருடன் எந்திர ரூபமாக எழுந்தருளியுள்ளார். மூலவர் முன் சமர்பிக்கப்படும் பால் தானாகவே பொங்கும் அதிசயம் இக்கோயிலின் சாந்நித்தியத்திற்குச் சான்று. இதனாலேயே இத்தலத்தை பொங்கு திருத்தலம் என போற்றுகின்றனர். மற்றொரு அற்புதம், குன்று முழுவதும் கோயிலின் வாயு மூலையில் வங்கடேசப் பெருமாள் சன்னதி கொண்டிருக்கிறார். இப்படி மருமகனுடன் மாமனும் இருப்பது வெகு...