அருள்மிகு சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயில், Advocate Nagarajan Street Udumalpettai, Udumalpettai - 642126, திருப்பூர் .
Arulmigu Srinivasa Anjaneyaperumal Temple, Advocate Nagarajan Street Udumalpettai, Udumalpettai - 642126, Tiruppur District [TM010099]
×
Temple History
தல வரலாறு
பல்லடத்தில் சுமார் 150 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீலஸ்ரீ. வெங்கட ரமண ராவ் என்கிற அந்தணரும், அவரது துணைவியார் பத்மாவதி என்பவரும் பிள்ளை பேறு வேண்டி ஏழுமலையான் திருப்பதி வெங்கடேசனை குறித்து சனி வார விரதம் பூண்டு ஒழுகி வந்தனர். ஒரு நாள் காடு அனுமந்தராயன் அவர் கனவில் தோன்றி ``200 வருடங்களுக்கு முன்பு உனது மூதாதையர்களால் தோற்றுவிக்கப்பட்டதான தாச ஆஞ்சநேயர் மூர்த்தியானவர் தாரா கிரிபுரத்தில் (உடுமலைப்பேட்டை) அருகில் அரச மரத்து முக்கன் புற்றருகில் எனது மூல நாதன் வெங்கடவன் கோயில் இன்றி இருக்கிறார். எனவே திருப்பதி மூர்த்திக்கு ஒரு சிலை ரூபம் செய்வித்து மூலவர் பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினால் உனக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். நான் ஸ்ரீனிவாச மூர்த்திக்கு சேவை...பல்லடத்தில் சுமார் 150 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீலஸ்ரீ. வெங்கட ரமண ராவ் என்கிற அந்தணரும், அவரது துணைவியார் பத்மாவதி என்பவரும் பிள்ளை பேறு வேண்டி ஏழுமலையான் திருப்பதி வெங்கடேசனை குறித்து சனி வார விரதம் பூண்டு ஒழுகி வந்தனர். ஒரு நாள் காடு அனுமந்தராயன் அவர் கனவில் தோன்றி ``200 வருடங்களுக்கு முன்பு உனது மூதாதையர்களால் தோற்றுவிக்கப்பட்டதான தாச ஆஞ்சநேயர் மூர்த்தியானவர் தாரா கிரிபுரத்தில் (உடுமலைப்பேட்டை) அருகில் அரச மரத்து முக்கன் புற்றருகில் எனது மூல நாதன் வெங்கடவன் கோயில் இன்றி இருக்கிறார். எனவே திருப்பதி மூர்த்திக்கு ஒரு சிலை ரூபம் செய்வித்து மூலவர் பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினால் உனக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். நான் ஸ்ரீனிவாச மூர்த்திக்கு சேவை சாதித்து இந்த பகுதியில் பெரிய ஊர் செய்து உனது வம்சத்தையும் ரட்சிப்பேன்``. என்று கூறி மறைந்தார். அதன் படி இந்த ஆலயம் எழுப்பப்பட்டது என்றும், அது முதல் இந்த ஆலயம் அனுமந்த ராயன் கோயில் என்று அழைக்கப்பட்டது என்றும் அறியப்படுகிறது.
இந்த ஆலயத்தில் மூலவர், சீனிவாச மூர்த்தியோடு கர்பக்கிரகத்திலேயே ஸ்ரீ தாச ஆஞ்சநேயர் உடன் இருந்து ஏகாந்த சேவை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாகும். இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லை என்றும் கூறுகின்றனர். எனவே இவர் ஹரி, வாயு, குரு என்று அழைக்கப்படுகிறார். பக்தர்களுக்கு அருள்வதில் வள்ளலான ஸ்ரீதாச ஆஞ்சநேயர் ஸ்ரீனிவாசருக்கு சேவை செய்யும் தாச ஆஞ்சநேயர் ஆவார். திருமணம் கைகூடுவதற்கும், பிள்ளைவரம், களவு மீட்பு, காணாமல் போனவரை கொண்டு சேர்த்தல், வழக்கு வியாஜ்யங்களை தீர்த்து வைத்தல், வேண்டியவாறு அருளுதல், ராகு, கேது, அங்காரகன், சனி போன்ற கிரகங்களினால் ஏற்படும் தீய பலன்களை நீக்குதல், ராம பக்தரான ஆஞ்சநேயர் பெருமாள் கோயில்களில் தனிசன்னதியில் இருப்பதை பார்த்து இருக்கலாம். ஆனால் இங்கு கருவறையில் பெருமாள் அருகிலேயே ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமி அமைந்திருப்பது சிறப்பாகும்.