தல பெருமை
கொங்கு மண்டலமாம் திருப்பூர் மாவட்டம் , உடுமலைப்பேட்டை வட்டம், குறிச்சிக்கோட்டை என்னும் சிற்றுரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது , இத்திருக்கோயில் சுயம்புவாக மாரியம்மன் எழுந்தருளியதாக இக்கிராம மக்கள் கூறுகிறார்கள் . இத்திருக்கோயில் உடுமலைப்பேட்டைக்கு தென்கிழக்கே அமராவதி நகர் செல்லும், பாதையில், தளிப்பாதையும் சந்திக்கும் இடத்திலிருந்து மேற்கே அரை கி.மீ. தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது . இத்திருக்கோயிலில் வருட உற்சவ ஆண்டுக்கொரு முறை ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் .