Screen Reader Access     A-AA+
அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில், Komaralingam - 642204, திருப்பூர் .
Arulmigu Kasiviswanathar Temple, Komaralingam, Madathukulam - 642204, Tiruppur District [TM010111]
×
Temple History

தல பெருமை

இத்திருக்கோயில் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்திலும் பழனியிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த இரண்டு ஊர்களுக்கிடையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் வீரராஜேந்திர கோனேரின்மை கொண்டான் என்ற அரசனால் கட்டப்பட்டதாக தெரிகிறது இத்திருக்கோயில் இருபுறமும் அடர்ந்த தென்னந் தோப்புகளும் வயல்களும் சூழ்ந்த பசுமை வாய்ந்த இடத்தில் அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மூலவர் காசியில் இருந்து கொண்டு வரப்பெற்றலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டு காசி விஸ்வநாதராக காட்சி கொடுக்கிறார். இடபுறத்தில் மூலவர் அம்மாள் காசி விசாலாட்சியாக அமைந்துள்ளார்.