தல வரலாறு

தாராபுரம் வட்டம் மதுக்கம்பாளையம் கிராமம் அமராவதி ஆற்றங்கரையில் வயல்வெளிகளில் நடுவில் அழுகுற அமைந்த திருக்கோயிலாகும். மேற்படி திருக்கோயிலை மொய்யகவுண்டன்படுகையை சேர்ந்த தனவந்தரால் நிர்மாணிக்கப்பட்டு திருக்கோயில் பூஜை காரியங்களுக்காகவும் நிர்வாக வசதிக்காகவும் நஞ்சை நிலம் பதினெழு ஏக்கா் மற்றும் இருபத்தி நான்கு சென்ட் நிலத்தினை திருக்கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளார். மேற்படி மெய்யகவுண்டருக்கும் மற்றும் துணைவியாருக்கும் இத்திருக்கோயில் வளாகத்தில் ஒா் இடது பகுதியில் சிறிய திருக்கோயிலை எழுப்பி மேற்படியாரின் திருவுருவச்சிலையை வடிவமைத்துள்ளனாா்.