Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Anuppappatti, Dharapuram - 638106, திருப்பூர் .
Arulmigu Mariamman Temple, Anuppappatti, Dharapuram - 638106, Tiruppur District [TM010144]
×
Temple History

தல வரலாறு

கொங்கு மண்டலத்தில் தலையநாடு எனப்போற்றிப் பாராட்டப்பெறும் அனுப்பபட்டியில் கோயில் கொண்டு எழுந்தருளி சர்வ அலங்கார பூஜிதையாக கொழுவீற்றிருந்து தம்மைச் சரணடையும் பக்தர்களுக்கு அறிவும், ஒளியும் ஊக்கமும் நல்லுணர்வும்,அமைதியும், புவி வாழ்வில் துயரமின்றியும்,தானம், வேள்வி, தவம், கல்வி ஆகியனவும், வானம் மழை பொழியவும், இயற்கை வளம் கொழிக்கவும், மானிடர்க்கு ஏற்படும் கண் நோய், கண்வெள்ளை,மண்டை இடி,அம்மை போன்ற தொத்து வியாதிகளும் அம்மன் சன்னதியில் வந்து பிரார்த்தித்து விபூதி தீர்த்தம் முதலிய பிரசாதங்களைப் பெற்று முழுமனதுடன் தொழுவோர்க்கு சூரியனை கண்ட பனிபோல் தொத்து வியாதிகள் விலகி சுகநலன்கள் அடைவதாக வரலாறு கூறுகிறது.