Screen Reader Access     A-AA+
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில், மூலனூர், மூலனூர் - 638106, திருப்பூர் .
Arulmigu Soleeswarar Temple, Moolanur, Dharapuram - 638106, Tiruppur District [TM010183]
×
Temple History

தல வரலாறு

எல்லாம் வல்ல உமையொரு பாகனின் திருவருள் துணையினால் எந்நாட்டிலும் பொன்னாடாக விளங்கும் கொங்கு வள நாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மும்மை சிறப்பை தன்னகத்தே கொண்டு அமராவதி நதியின் தென்புலத்தில் சிலம்பாநதிக்கரையில் ஆதிபுரி எனும் வரலாற்று சிறப்புடைய பெயரால் அழைக்கப்படும் மூலனுhரின் கண் பரம கருணாமூர்த்தியாகவும் மேலும் திருமந்திரத்தை நமக்கு அருளிய திருமூலர் வழிபட்டதும் நால்வரில் ஒருவரான ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வைப்புத்தலமாகவும் கடவுள் எனும் பதத்திற்குரிய குணங்களான அனைத்தையும் கடந்து நிற்கும் இயல்பையும் உடைய தனிப்பெரும் கருணை கடவுளான சிவபெருமான் இல்லத்தில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், ஸ்ரீ கம்பத்து தெண்டாயுதபாணி சுவாமி மற்றும் பரிவாரங்களோடு ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத, ஸ்ரீ சோழீஸ்வரர்,...