ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், வ.உ.சி. பூங்கா, அருள்மிகு மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட பட்டியல் சேர்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு ஈரோடு மாநகர், அருள்மிகு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில் செயல் அலுவலர் தக்காராக இருந்து நிர்வாகம் கவனிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலேயே சனிப்ரீத்தி தலத்தில் ஆஞ்சநேயருக்கென்று தனித் திருக்கோயில் அருள்மிகு மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் மட்டுமே. இத்திருக்கோயிலில் உள்ள சுவாமி சுயம்பு ரூபமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு வேண்டிய வரம் தந்து அருள்பாலிக்கிறார்.
வடக்கு முக ஆஞ்நேயரை வழிப்பட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகூம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. ஆஞ்சநேயர் ராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தப்படி அமர்ந்திருந்தார். ...ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், வ.உ.சி. பூங்கா, அருள்மிகு மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட பட்டியல் சேர்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு ஈரோடு மாநகர், அருள்மிகு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில் செயல் அலுவலர் தக்காராக இருந்து நிர்வாகம் கவனிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலேயே சனிப்ரீத்தி தலத்தில் ஆஞ்சநேயருக்கென்று தனித் திருக்கோயில் அருள்மிகு மகாவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் மட்டுமே. இத்திருக்கோயிலில் உள்ள சுவாமி சுயம்பு ரூபமாக வீற்றிருந்து பக்தர்களுக்கு வேண்டிய வரம் தந்து அருள்பாலிக்கிறார்.
வடக்கு முக ஆஞ்நேயரை வழிப்பட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகூம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. ஆஞ்சநேயர் ராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தப்படி அமர்ந்திருந்தார். வடக்கு பக்கமாக திரும்பி அவரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தப்படியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம். இத்தலத்து ஆஞ்சநேயர் பிரகார மூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருள்பாலிக்கிறார். இவர் தன் வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல் வைத்து காட்சி தருவது சிறப்பு.
ஸ்ரீ மகாவீர ஆஞ்சநேயரை தரிசிக்க சன்னதிக்குள் செல்ல படி ஏறும் முன் படிக்கு வலதுபுறம் ஸ்ரீ மகா கணபதி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.