Screen Reader Access     A-AA+
அருள்மிகு குருநாதஸ்வாமி திருக்கோயில், Puthupalayam, Anthiyur - 638501, ஈரோடு .
Arulmigu Gurunathaswamy Temple, Puthupalayam, Anthiyur - 638501, Erode District [TM010261]
×
Temple History

தல பெருமை

ஈரோடு மாவட்டத்தில் மிகப் பேர் செல்லும் இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா குருநாதசுவாமி திருக்கோயில் திருவிழா. தலவரலாறு சிதம்பரத்தை அடுத்த பிச்சாபுரம் வனப்பகுதியில் ஆண்டுகளுக்கு முன் குட்டியாண்டவருக்கு கோயில் கட்டி மூன்று குழவிக்கற்களை மட்டும் நட்டு வழிபட்டனர்.இந்தக் கோயில் பூசாரி வீட்டுப் பெண்ணை ஆற்காடு நவாப் திருணம் செய்ய விருப்பம் தெரிவித்து பெண் கேட்டுள்ளார். உறவினர்களிடம் கலந்து பின் சம்மதம் தெரிவிப்பதாக நவாபின் ஜவானிடம் பூசாரி கூறினார். உறவினர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை.அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவதாக நவாப் மிரட்டியுள்ளார். அப்போது உறவினர் ஒருவருக்கு அருள்வந்து நீங்கள் வணங்கி வரும் இம்மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு இரவோடு இரவாகச் சென்றுவிடுங்கள் என்று கூறினார். பூஜாரியாரின் உறவினர்கள் ஒரு கூடையில் மூன்று...