Screen Reader Access     A-AA+
அருள்மிகு சோழிஸ்வரர் திருக்கோயில், பெருந்துறை, Perundurai - 638052, ஈரோடு .
Arulmigu Soleeswarar Temple, Perundurai, Perundurai - 638052, Erode District [TM010273]
×
Temple History

தல பெருமை

கோச்செங்கட்சோழன் எனும் சோழமன்னன் முற்பிறவியில் திருவானைக்காவில் சிலந்தியாக பிறவி எடுத்திருந்தான். சிலந்தி தன் ஞானத்தால், வெண்நாவல் மரத்தடியில் வீற்றிருந்த ஈசனுக்கு தன்னை அறியாமலேயே சிவசேவை செய்து வந்தது. சிவபெருமான் மீது இலை, சருகு, தூசி விழாமல் இருக்க தன் வழக்கப்படி வலை பின்னி வைத்தது. பழம்பிறப்பில் செய்த தவப்பயனால் வெள்ளை யானை ஒன்றும் தினமும் தன் தும்பிக்கையில் நீர் கொண்டு வந்து சிவனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதித்து வந்தது. தனது வழிபாட்டிற்கு இடையூறாகத் தொங்கிக் கொண்டிருந்த வலையை இழுத்துப் போட்டு பிய்த்து எறிந்தது யானை. தினம் தினம் சிலந்தி வலை பின்ன, யானை பிய்த்துப் போட, ஒரு நாள் கோபம் மிக அதிகம் கொண்ட சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து கடித்து...