தல வரலாறு
அருள்மிகு மதுரைவீரன் திருக்கோயில் ஆதிதிராவிட சமூக மக்களின் குலதெய்வாமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் மதுரைவீரன் சுவாமி சுதை ரூபத்தில் அருள்பாலிக்கின்றார். அன்றைய காலத்தில் மதுரையில் இருந்து தங்கள் பிழைப்பிற்காக கவுந்தப்பாடி வந்து விராலிமேட்டை தேர்ந்தேடுத்து விவசாயம் மற்றும் கூலி வேலை செய்துவந்தனர். அவர்கள் தங்களுக்கென்று குலதெய்வம் வேண்டும் என்பதற்காக மதுரைவீரன் சுவாமியை சுதைவடிவில் அமைத்து கோயில் கட்டி வழிபாடுகள் செய்து வருகின்றனர். மதுரைவீரனுக்கு காவல் தெய்வமாக மூன்று முனியப்பன் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.