தல வரலாறு
இந்த திருக்கோயிலில் மூலவர் சுயம்பு லிங்க வடிவத்தில் உள்ளார். முன்னொரு காலத்தில் ஒரு பாறையின் மீது குறிப்பிட்ட இடத்தில் ஒரு தெய்வீக பசு தினமும் சென்று பால் சுரந்து வந்துள்ளது. பின்னர் சுயம்புவாக இருக்கும் தன்னை வழிபடுமாறு ஒரு அசரீரி ஒலி கேட்க மக்கள் அந்த இடத்தில் இருந்த சுயம்பு லிங்கத்தை பூஜித்து வழிபடுகின்றனர்.