தல வரலாறு
முன்னொரு காலத்தில் ஒரு தெய்வீக பசு நாள்தோறும் வந்து பால் சுரந்து வழிபாடு செய்தது. இங்கு அருளாட்சி புரியும் அம்பிகையின் பெயர் கோவர்தனாம்பிகை என்று இருப்பதால் அந்த தெய்வீக பசு வடிவில் அம்பாளே பெருமானை பூஜித்திருக்க வேண்டும் அல்லது தெய்வீக பசு நாள்தோறும் பூஜித்ததால் அம்பாளுக்கு கோவர்தனாம்பிகை என்ற பெயர் வந்திருக்க வேண்டும். இது தவிர இரண்டு தெய்வீக நாகங்கள் நாள்தோறும் இங்குள்ள சுயம்பு லிங்க மூர்த்தியை தங்களது வாயினால் மலரிட்டு பூஜித்து வந்துள்ளமையால் இங்குள்ள பெருமானுக்கு நாகேஸ்வரர் என்னும் திருப்பெயரும் உண்டாயிற்று.