Screen Reader Access     A-AA+
அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், மதுக்கரை - 641105, கோயம்புத்தூர் .
Arulmigu Dharmalingheswarar Temple, Madukkarai, Madukarai - 641105, Coimbatore District [TM010578]
×
Temple History

தல வரலாறு

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், மதுக்கரை மலைமேல் சுயம்பு மூர்த்தியாக தர்மலிங்கேஸ்வரர் உள்ளார். பழைய இராசகேசரிப் பெருவழி, இன்றைய தேசிய நெடுஞ்சாலை எண்.47 ஆகிய இரண்டிற்கும் இடையில் இயற்கைச் சூழலில் அமைந்த மலை தருமலிங்க மலையாகும். இவ்வாறு பழைய பெருவழிக்கும் புதிய பெருவழிக்கும் இடையில் அமைந்த இறைவன் வீற்றிருக்கும் மலை வேறு எங்கும் இல்லை. கயிலை மலை அமைப்பில் மலையின் மேல்பகுதி அமைந்துள்ளது. பேரூர்க்கு வந்து வழிபட்ட காமதேனு தருமலிங்கரை வழிப்பட்டுள்ளது. பரசுராமன் தருமலிங்க மலைக்கு வந்து வழிபட்டுச் சென்றுள்ளான். சித்தர் பலர் இங்கு வாழ்ந்துள்ளனர், வழிபட்டுள்ளனர்.