தல வரலாறு
இத்திருக்கோயில் 1248ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது எனவும், வேள்வீஸ்வரர் சன்னதி கால்பகுதி குமுதபடை மற்றும் பட்டிகைவரை கருங்கல்லால் கட்டப்பட்டது எனவும் தெரியவருகிறது. இத்திருக்கோயிலின் வடக்குப்புறத்தில் வேள்வீஸ்வரர் சன்னதியும் தெற்கு புறத்தில் அகத்தீஸ்வரர் சன்னதியும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு புறத்தில் சுக்ரதீர்த்தம் எனும் திருக்குளம் ஒன்று உள்ளது.