தல வரலாறு
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், விஜயமங்கலம், அருள்மிகு முத்து விநாயகர் என்ற பவளவிநாயகர் திருக்கோயில் சந்தைபேட்டை அருகில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் விஜயமங்கலம் டேல் கேட் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஒரு கால பூஜை திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு நல்ல கிணற்று பிள்ளையார் என்ற பெயரும் உண்டு. இத்திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் கார்த்திகை தீபம் மிக சிறப்பாக கொண்டப்படுகிறது.