தல வரலாறு
ஈரோடு மாவட்டம்,பெருந்துறை வட்டம், நல்லாம்பட்டி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்தள்ளது. இத்திருக்கோயிலில் அம்மனுக்கு ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலுக்கு மார்கழி மாதம் திருவிழா நடைபெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். அம்மன் கிராம தெய்வமாக கிராம மக்களுக்கு அருள்பாலிக்கிறாள்.