தல வரலாறு
ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு வட்டம், கிருஷ்ணம்பாளையம், அருள்மிகு ஓங்காளியம்மன் (எ) அங்காளம்மன் திருக்கோயில் மெய் அன்போடு துதிப்போருக்கு வேண்டுவன விரும்பி அருளச்செய்கிறாள். இத்திருக்கோயில் அந்த ஊர் பகுதியில் காவல் தெய்மாக அருள் செய்கிறாள். இந்த அம்மனுக்கு மார்கழி மாதம் பொங்கல் திருவிழா வெகு விமர்சியாக 10 நாள்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு பூசை நடைபெற்று வருகிறது.