அருள்மிகு சிதம்பரசாமி சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை - 600042, சென்னை .
Arulmigu Chithambaswamy Chithampareshwar Temple, Velacheery, Chennai - 600042, Chennai District [TM001195]
×
Temple History
தல வரலாறு
இருநூறு ஆண்டுக்கு முன், அப்போது, வேதஸ்ரேணி என்றழைக்கப்பட்டு, தற்போது, வேளச்சேரி என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள, தண்டீஸ்வரர் கோயிலுக்கு வந்து சிந்தனைக்கெட்டாத சிவரூபத்தை கடின உழைப்பால் காண் என்ற வாழ்க்கை போதனையை உலகுக்கு உணர்த்திய மகான், வேளச்சேரி மகான் என்றும் சிதம்பர பெரிய சுவாமிகள் என்று பக்தர்களால் போற்றப்படுகிறார்.
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் ஆரியம்பாக்கம் என்ற கிராமத்தில் முனியப்பர் மற்றும் பெரியநாயகி என்ற பணக்கார தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் சிதம்பர பெரிய சுவாமி. இவரது இயற்பெயர் வீராசாமி என்பதாகும். தனது ஏழாம் வயதில் பெற்றோரை விட்டு விலகி, துறவறம் மேற்கொண்டு, தமது இல்லத்திலிருந்து வெளியேறினார். சிவத்தொண்டுகள் செய்வதில் பெரும் விருப்பம் கொண்டு பல சிவாலயங்களுக்குச் சென்றார்.
...இருநூறு ஆண்டுக்கு முன், அப்போது, வேதஸ்ரேணி என்றழைக்கப்பட்டு, தற்போது, வேளச்சேரி என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள, தண்டீஸ்வரர் கோயிலுக்கு வந்து சிந்தனைக்கெட்டாத சிவரூபத்தை கடின உழைப்பால் காண் என்ற வாழ்க்கை போதனையை உலகுக்கு உணர்த்திய மகான், வேளச்சேரி மகான் என்றும் சிதம்பர பெரிய சுவாமிகள் என்று பக்தர்களால் போற்றப்படுகிறார்.
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் ஆரியம்பாக்கம் என்ற கிராமத்தில் முனியப்பர் மற்றும் பெரியநாயகி என்ற பணக்கார தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் சிதம்பர பெரிய சுவாமி. இவரது இயற்பெயர் வீராசாமி என்பதாகும். தனது ஏழாம் வயதில் பெற்றோரை விட்டு விலகி, துறவறம் மேற்கொண்டு, தமது இல்லத்திலிருந்து வெளியேறினார். சிவத்தொண்டுகள் செய்வதில் பெரும் விருப்பம் கொண்டு பல சிவாலயங்களுக்குச் சென்றார்.
விருத்தாச்சலத்தில் சில காலம் தங்கி இருந்து, திருத்துருத்தி இந்திரபீடம் குமார தேவரின் பரம்பரையில் வந்த குழந்தைவேல் என்னும் குருவின் சீடரானார். விருத்தாசலத்தில் இருந்து, பல திருத்தலங்களை தரிசித்துவிட்டு, வேதஸ்ரேணி எனும் வேளச்சேரி வந்தடைந்தார்.
மகான் தாம் ஜீவ சமாதியடையப் போகும் நாளை அறிவித்து சமாதிக் குழியையும் தயார் செய்தார். 1858-ம் ஆண்டு டிசம்பர் நான்காம் நாள், கார்த்திகை மாதம் பதினாறாம் தேதி, சனிக்கிழமை காலை 9.45 மணிக்கு விசாக நட்சத்திரத்தில் - நவாப், அரசாங்க மருத்துவர்கள், காவலர்கள் சுற்றியிருக்க சமாதிக் குழிக்குள் சென்று அமர்ந்தார். உடனே தமது மூச்சையும் நாடியையும் நிறுத்தினார். அப்போதைய அரசாங்க மருத்துவரின் சோதனைக்குப் பிறகு சமாதி மூடப்பட்டது. அந்த சமாதி தற்போது, மக்கள் வழிபடும் கோயிலாக மாறி உள்ளது. சமாதி மேல், அவரின் சிலையை வைத்து வழிபடுகின்றனர். அவர் சமாதி அடைந்த, கார்த்திகை மாதம் தோறும், குருபூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிந்தனைக்கெட்டாத சிவரூபத்தை கடின உழைப்பால் காண் எனும் அவரது வாழ்வுரையை ஏற்று, நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையில் அதிகம் பேர் அங்கு வந்து தரிசிக்கின்றனர். சுவாமிகளின் ஜீவ சமாதி இருக்கும் ஆலயத்தினுள் பஞ்சமுக லிங்கம், பஞ்சமுக விநாயகர், பஞ்சமுக ஆஞ்சனேயர், குமாரசுவாமி, குபேரப் பெருமாள், மகாமேருவுடன் காமாட்சியம்மாள் ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி பதிணென் சித்தர்களின் சொரூபங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
வேளச்சேரி மெயின் ரோட்டில், காந்தி சாலை திருப்பத்திற்கு அருகில் மகான் ்ரீ சிதம்பர பெரிய சாமி கோயில் உள்ளது. இந்த கோவிலை, அமைதி வரம் தரும் ஜீவசமாதியாகவும், இன்னும் அவர் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அவருடைய கிருபையால் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.