அருள்மிகு வள்ளாள ஈஸ்வரன் திருக்கோயில், Sathampur - 638104, ஈரோடு .
Arulmigu Vallala Eswaran Temple, Sathampur - 638104, Erode District [TM012046]
×
Temple History
தல வரலாறு
ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சியில் சாத்தம்பூர் கிராமத்தில் அருள்மிகு வள்ளால ஈஸ்வரன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான திருக்கோயிலாகும். புண்ணியநதியாம் காவேரிக்கரையில் காவேரியை பார்த்தவாறு வள்ளாலீஸ்வரன் வீற்றிருப்பது சிறப்பு. இத்திருக்கோயில் அகத்தியர் வந்து வழிபட்ட ஸ்தலம் என சொல்லப்படுகிறது. இத்திருக்கோயில் சோழர்காலத்தில் கட்டப்பட்டதாக ஆதார பூர்வமாக தெரிய வருகிறது. இத்திருக்கோயில் வள்ளால ராஜா என்னும் மன்னரால் கட்டப்பட்டதாகவும், அதனால் வள்ளாலீஸ்வரன் என வழங்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. இத்திருக்கோயில் உள்ள சோழர் காலத்து கல்வெட்டு இத்திருக்கோயிலின் பழமையை எடுத்துரைக்கிறது. அருள்மிகு வள்ளாலீஸ்வரர் கோயில் செல்லும் வழியில் அருள்மிகு கம்பத்தாழ்வார் திருக்கோயில், அருள்மிகு சாமுண்டியம்மன் திருக்கோயில்அமைந்துள்ளது.இத்திருக்கோயில்கள் அமைந்துள்ள இடம் கிராமமாக இருந்ததாகவும், தற்போது இயற்கை காரணங்களால் மக்கள் இடம் பெயர்ந்ததால்...ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சியில் சாத்தம்பூர் கிராமத்தில் அருள்மிகு வள்ளால ஈஸ்வரன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான திருக்கோயிலாகும். புண்ணியநதியாம் காவேரிக்கரையில் காவேரியை பார்த்தவாறு வள்ளாலீஸ்வரன் வீற்றிருப்பது சிறப்பு. இத்திருக்கோயில் அகத்தியர் வந்து வழிபட்ட ஸ்தலம் என சொல்லப்படுகிறது. இத்திருக்கோயில் சோழர்காலத்தில் கட்டப்பட்டதாக ஆதார பூர்வமாக தெரிய வருகிறது. இத்திருக்கோயில் வள்ளால ராஜா என்னும் மன்னரால் கட்டப்பட்டதாகவும், அதனால் வள்ளாலீஸ்வரன் என வழங்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. இத்திருக்கோயில் உள்ள சோழர் காலத்து கல்வெட்டு இத்திருக்கோயிலின் பழமையை எடுத்துரைக்கிறது. அருள்மிகு வள்ளாலீஸ்வரர் கோயில் செல்லும் வழியில் அருள்மிகு கம்பத்தாழ்வார் திருக்கோயில், அருள்மிகு சாமுண்டியம்மன் திருக்கோயில்அமைந்துள்ளது.இத்திருக்கோயில்கள் அமைந்துள்ள இடம் கிராமமாக இருந்ததாகவும், தற்போது இயற்கை காரணங்களால் மக்கள் இடம் பெயர்ந்ததால் தற்போது இத்திருக்கோயிலினை சுற்றி வீடுகள் ஏதுமில்லை.இத்திருக்கோயிலில் ஒருகாலபூஜை நடைபெறுகிறது. தைமாதம் கடைசி வெள்ளிக்கிழமை வருடாந்திர திருவிழாவாக உள்ளுர் மக்கள் மற்றும் கொங்கு சமுதாய மக்களால் கொண்டாடப்படுகிறது. இத்திருக்கோயிலில் வள்ளால ஈஸ்வரன், நவக்கிரகம், பைரவர், வள்ளி தெய்வாணையுடன்,முருகர், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி, செல்வவிநாயகர், சண்டிகேஸ்வரர், போன்ற சன்னதிகள் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வழிபட காரிய சித்தி மற்றும் தடைகள் நீங்கும் எனவும் சொல்லப்படுகிறது.