இலக்கிய பின்புலம்
அஞ்சூர் அழகுநாச்சியம்மன் முத்துகருப்பணசுவாமி கோயில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், அஞ்சூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் அழகுநாச்சியம்மன் சன்னதியும், கருப்பண்ணசாமி உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.