தல வரலாறு

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அந்தியூரை ஆண்ட கெட்டிமுதலியார் என்ற குறுநில அரசனால் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிற்காலத்தில் அவரதுபெயரால் கெட்டிவிநாயகர் என புகழ்பெற்றது. அந்தியூரில் உள்ள விநாயகர் திருக்கோயில்களில் மிகவும் பழமையான திருக்கோயில் ஆகும். எந்த காரியம் தொடங்குவது என்றாலும் இத்தல விநாயகரை வழிபட்டு தான் துவங்குகின்றனர். இத்திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் மிகவும் பழமைவாய்ந்த திருக்கோயில்ஆகும்.