அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோயில், பெரிபேட்டை, வேலூர் - 632004, வேலூர் .
Arulmigu Kasiviswanathar Temple, Beripet, Vellore - 632004, Vellore District [TM001311]
×
Temple History
இலக்கிய பின்புலம்
வேலூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலும் , சி.எம்.சி மருத்துவமனைக்கு எதிரில் சுக்கையா வாத்தியார் தெருவில் அமைந்துள்ளது. பேரிப்பேட்டை அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயிலாகும்.
தம்மை நாடியோரைக் கைவிடாமல் காக்கும் அருள்மிகு சமேத காசி விசுவநாத சாமி, வேலூர் சி.எம்.சி மருத்துவமனை முன் வாயிலின் எதிர்புறம் சுக்கையா வாத்தியார் தெருவில் சுமார் 300 மீட்டர் தொலைவில் இருந்து அருள்பாலித்து வருகிறார்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இத்திருக்கோயிலின் பிரதான வாயில் தென்புறம் உள்ளது. காசி விசுவநாதர் மற்றும் விசாலக்ஷி அம்மன் தனித்தனி சன்னதிகளில் குடியிருந்து பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றனர்.
திருக்கோயில் பரிவார தேவதைகளாக அருள்மிகு விநாயகர்,வள்ளிதேவசேனா,சமேத சுப்ரமணியர், அருள்மிகு சண்டிகேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி,மகாவிஷ்ணு,துா்க்கை,கால பைரவர்,வீரபத்ரர் ஆகியோர் அருள் பாலித்து வருகின்றனர்.
நவக்கிரங்கள் தனியே வெளிப்புற...வேலூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலும் , சி.எம்.சி மருத்துவமனைக்கு எதிரில் சுக்கையா வாத்தியார் தெருவில் அமைந்துள்ளது. பேரிப்பேட்டை அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயிலாகும்.
தம்மை நாடியோரைக் கைவிடாமல் காக்கும் அருள்மிகு சமேத காசி விசுவநாத சாமி, வேலூர் சி.எம்.சி மருத்துவமனை முன் வாயிலின் எதிர்புறம் சுக்கையா வாத்தியார் தெருவில் சுமார் 300 மீட்டர் தொலைவில் இருந்து அருள்பாலித்து வருகிறார்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இத்திருக்கோயிலின் பிரதான வாயில் தென்புறம் உள்ளது. காசி விசுவநாதர் மற்றும் விசாலக்ஷி அம்மன் தனித்தனி சன்னதிகளில் குடியிருந்து பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றனர்.
திருக்கோயில் பரிவார தேவதைகளாக அருள்மிகு விநாயகர்,வள்ளிதேவசேனா,சமேத சுப்ரமணியர், அருள்மிகு சண்டிகேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி,மகாவிஷ்ணு,துா்க்கை,கால பைரவர்,வீரபத்ரர் ஆகியோர் அருள் பாலித்து வருகின்றனர்.
நவக்கிரங்கள் தனியே வெளிப்புற சன்னதியில் அருள் அளிக்கின்றனர்.உற்சவர் சன்னதியில் அருள்மிகு சோமாஸ்கந்தர் பரிவாரங்களுடன் காட்சியருளுகிறார். இத்திருக்கோயில் ஆனி திருமஞ்சன தினத்தை மையமாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் 13 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பிரதோஷ பூஜைகளுடன் மாத உற்சவங்களான கிருத்திகை,மாதப்பிறப்பு,போன்றவை நடைபெறுகின்றன.நவராத்திரி 9 நாள் உற்சவம்,ஐப்பசி பௌர்ணமி,அன்னாபிஷேகம்,கார்த்திகை தீபம்,ஆருத்ரா உற்சவமும், மேற்படி நாட்களில் சங்காபிஷேகம் நடைபெறுவதும் மிக சிறப்பானதாகும்
மூலவா் அருள்மிகு காசி விசுவநாதர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இடதுபுறம் தனிச்சனனதியில் நின்றருளும் அருள்மிகு விசாலாட்சி நான்கு கரங்களுடன் தம்மை நாடி வரும் பக்தர்களை தாயாய் தாங்குகிறார்.
அம்மை, ஈசன் அருள் பெற்றிட வட மாநிலத்தாா் பெருமளவு வருவது வழக்கத்தில் உள்ளது. நோயுடன் வந்த வட மாநிலத்தார் இறைவன் அருளால் அவர் பெறும் மருத்துவ சிகிச்சைகள் பலன் அளித்து மகிழ்ச்சியை திருக்கோயிலி்ல் நிகழ்வுகளில் பங்குக்கொள்வது மகிழத்தக்கதாகும்.