அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில், தோட்டப்பாளையம், வேலூர் - 632004, வேலூர் .
Arulmigu Selliamman Temple, Thottapalayam, Vellore - 632004, Vellore District [TM001331]
×
Temple History
தல வரலாறு
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எத்தமரெட்டியின் முதல் மனைவிக்குப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பொம்மி, திம்மி, இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகள் சொத்துப் பிரச்சனையில் இரண்டாவது மனைவியின் மகன்கள், முதல் மனைவியின் பொம்மி, திம்மி இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினர். அவர்கள் இருவரும் தப்பி வந்து சேர்ந்த இடம் வேலூர் பாலாற்றங்கரை. அப்போது வேலூர் பிரதேசத்தை ...கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எத்தமரெட்டியின் முதல் மனைவிக்குப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் பொம்மி, திம்மி, இரண்டாவது மனைவிக்கு நான்கு குழந்தைகள் சொத்துப் பிரச்சனையில் இரண்டாவது மனைவியின் மகன்கள், முதல் மனைவியின் பொம்மி, திம்மி இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினர். அவர்கள் இருவரும் தப்பி வந்து சேர்ந்த இடம் வேலூர் பாலாற்றங்கரை. அப்போது வேலூர் பிரதேசத்தை ஆண்ட மன்னனிடம் தங்கள் நிலைமையைச் சொல்லி தங்களுக்கு இடம் ஒதுக்கும்படி கேட்டனர். மன்னன் காட்டிய இடத்தில் வாழ்ந்தவர்கள் அங்கிருந்த எல்லையம்மன் கோயிலில் வழிபாடுகளை செய்தனர். அந்தக் கோயிலில் இருந்த சப்த மாதாக்களில் ஒருத்தியை தங்கள் குல தெய்வமான சாமுண்டீஸ்வரியாக பாவித்து வணங்க ஆரம்பித்தனர்.
ஒருநாள் ஊருக்குள் நுழைந்த கொள்ளையர்களை திம்மியும், பொம்மியும் சாமுண்டீஸ்வரியின் சக்தியை பெற்று பந்தாடி ஊரைவிட்டே துரத்தினர். இதன்மூலம் அம்மாவின் மகிமையை உணர்ந்துகொண்ட மக்கள், அன்னையை செல்லியம்மன் என்று பெயர் சூட்டி வணங்க தொடங்கினர். இன்று வரை தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு கேட்டதை அள்ளித் தரும் பிரசாதியாகத் திகழ்கிறாள் செல்லியம்மன்.
கருவறையில் பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி என்கிற செல்லியம்மன் ஆகிய சப்த மாதாக்கள் வீற்றிருக்கின்றனர். இவர்களில் பிரதானமாக தீஜூவாலை கிரீடத்துடன் 4 கைகளில் டமருகம், சூலம், பாசம், கபாலம் ஏந்தி சுகாசனத்தில் கிழக்கு நோக்கி இன்முகமாக வீற்றிருக்கிறாள். வலப்பக்கம் விநாயகரும் இடப்பக்கம் வீரபத்ரருடன் அருள்பாலித்து வருகின்றாள்.