Screen Reader Access     A-AA+
அருள்மிகு சொர்ணமுகீஸ்வரர் திருக்கோயில், காந்தி நகர், காட்பாடி - 632006, வேலூர் .
Arulmigu Sornamugeeswarar Temple, Gandhi Nagar, Katpadi - 632006, Vellore District [TM001350]
×
Temple History

தல வரலாறு

சீர்மிகு தொண்டை நன்னாட்டின் பாலாற்றின் வடகரையின் அருகில் (காட்பாடி நெடுஞ்சாலையில் )காந்தி நகரில் பழமைவாய்ந்த அருள்மிகு சொர்ணமுகீஸ்வரர் வகையறா திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் அருகில் சிறு ஒடை பக்கத்தில் இருந்த பிள்ளையாரை எடுத்து வந்து இந்த கோயிலில் எழுந்தருளச் செய்துள்ளனர். இதனால் இக்கோயிலுக்கு ஒடைபிள்ளையார் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இங்கு அமைந்துள்ள அருள்மிகு சொர்ணமுகீஸ்வர் மேற்கு நோக்கியும் தெற்கு நோக்கி அருள்மிகு சௌந்தரநாயகி அமமையும் எழுந்தளியுள்ளார்.இவ்விறைவனுக்கு தினசரி பூஜை செய்து சந்தனப் பொட்டு வைப்பது வழக்கம். அந்த சந்தனத்திலகம் மறுநாள்சொர்ணமாக மாறியிருக்கும்.அதனைக்கொண்டு பூஜா காரியங்கள் செவ்வனே நடைபெற்று வந்தன ஒரு நாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அர்ச்சகர் தன் மகனிடம் அப் பூஜை பொறுப்பை ஒப்படைக்க...