தல வரலாறு
வாழைப்பந்தல் கிராமம் முற்காலத்தில் வாழைமரங்கள் நிறைந்திருந்ததால் கதலி வனம் என அழைக்கப்படட்டது. இங்கு கஜேந்திரன் என்ற யானை வாழ்ந்து வந்ததாகவும், அந்த யானை ஸ்ரீமன் நாராயணன் மந்திரத்தை உச்சரித்து உணவருந்தி வந்ததாகவும், அது ஒரு நாள் ஆற்றில் நீர் இல்லாத நிலையில் குளத்தில் நீர் அருந்துவதற்காக வந்தபோது குளத்தில் இருந்த முதலை யானையின் காலை பற்றி இழுத்ததாகவும் அந்த நேரத்தில் யானை தம்னை காப்பாற்றுமாறு ஸ்ரீமன் நாராயணனை நினைத்ததாகவும் அப்போது எம்பெருமான் கஜேந்திரனை காப்பாற்றியதால் இத்திருக்கோயில் கஜேந்திர வரதராஜபெருமாள் திருக்கோயில் என்று அழைக்கப்பட்டது என கிராம மக்கள் மற்றும் திருக்கோயில் பட்டாச்சாரியார்கள் மூலம் அறியப்படுகிறது. இத்திருக்கோயில் செய்யாறு, கமண்டலநதி, பிரம்பாறு ஆகியன ஒன்று சேரும் இடத்தில் அமைந்துள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் அமைந்துள்ளது.