அருள்மிகு நாகநாதீஸ்வரர் திருக்கோயில், கீழச்சூர் - 635809, வேலூர் .
Arulmigu Naganathaswamy Temple, Keelachur - 635809, Vellore District [TM001363]
×
Temple History
தல பெருமை
பள்ளிகொண்டா என்னும் இவ்வூருக்கு வித்துர் என்னும் பெயரும் பண்டைய காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலமானது மூங்கில் மரங்களால் சூழப்பட்டு நாகங்கள் அதிகமாக குடியிருந்து இவற்றின் நடுவே ஈஸ்வரர் காட்சியளித்து ஒளி வீசியதால் இத்தலத்திற்கு நாகநாதீஸ்வரர் என பெயர் வர காரணமாயிற்று.
இத்திருக்கோயிலானது இராஜராஜ சோழனின் தாத்தாவான முதலாம் பராந்தக சோழன் அவர்களால் கட்டப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. சுயம்பாகிய மூலவர் அருள்மிகு நாகநாதீஸ்வரர் நவபாசாங்கத்தால் அமைந்துள்ளதாக சொல் வாக்கு உள்ளது.
இத்தலம் திருநாகேஸ்வரம் திருக்கோயிலுக்கு இணையாக சக்தி பெற்றுள்ள தலம் என்பது சித்தர் அருள்வாக்கு எனவே இத்தலத்தில் நாகதோச நிவர்த்தி பூஜை, ராகு-கேது பூஜை செய்தால் அதன் குறைகள் நிவர்த்தி அடைந்து வழிபடும் மக்கள் கூறுவதே இதற்கு சாட்சியாகவும் சிறப்பினை பரைசாற்றுவதாகவும் அமைந்துள்ளது...பள்ளிகொண்டா என்னும் இவ்வூருக்கு வித்துர் என்னும் பெயரும் பண்டைய காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலமானது மூங்கில் மரங்களால் சூழப்பட்டு நாகங்கள் அதிகமாக குடியிருந்து இவற்றின் நடுவே ஈஸ்வரர் காட்சியளித்து ஒளி வீசியதால் இத்தலத்திற்கு நாகநாதீஸ்வரர் என பெயர் வர காரணமாயிற்று.
இத்திருக்கோயிலானது இராஜராஜ சோழனின் தாத்தாவான முதலாம் பராந்தக சோழன் அவர்களால் கட்டப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. சுயம்பாகிய மூலவர் அருள்மிகு நாகநாதீஸ்வரர் நவபாசாங்கத்தால் அமைந்துள்ளதாக சொல் வாக்கு உள்ளது.
இத்தலம் திருநாகேஸ்வரம் திருக்கோயிலுக்கு இணையாக சக்தி பெற்றுள்ள தலம் என்பது சித்தர் அருள்வாக்கு எனவே இத்தலத்தில் நாகதோச நிவர்த்தி பூஜை, ராகு-கேது பூஜை செய்தால் அதன் குறைகள் நிவர்த்தி அடைந்து வழிபடும் மக்கள் கூறுவதே இதற்கு சாட்சியாகவும் சிறப்பினை பரைசாற்றுவதாகவும் அமைந்துள்ளது என்பது கண்கூடு.
பிரிகாரத்தில் அமைந்துள்ள சூரிய பகவான் தரிசித்து பரிகாரம் செய்தால் சூரியதிசை நடப்பவர்களுக்கு சூரிய பகவான் பரிபூரண அனுகிரகம் கிடைக்கும். மற்றும் ஆலய தனி சன்னதியில் வீற்றிருக்கும் விசாலாட்சியம்மன் அருள் கிடைக்கப் பெறுகிறது.
இத்தலத்தில் சப்த கன்னி நடமாட்டம் வராகி ஆஞ்சநேயர் பார்வை நிறைந்த இடமாகும்.
வரலாற்று சாற்றை பார்க்கும் போது இது ஒரு பிதுர் கர்ம பிராய சித்த கைங்கரிய சேத்திரமாகும்.