தல வரலாறு
வேலூர் மாவட்டத்திலேயே மிகவும் புராதான சக்தி வாய்ந்த பிரசித்திபெற்ற பிரார்த்தனை ஸ்தலம் என்பதால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய், புதன் கிழமைகளில் நடைபெறும் புஷ்பரத எரித்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பத்தர்கள் பச்சை ஓலையால் வேயப்பட்ட மாட்டு வண்டிகளிலும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் குடும்பத்துடன் வருகை தந்து பிரார்த்தனை செய்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும், கால்நடைகள் பிணி தீர்க்கும் ஸ்தலமாக உள்ளதால் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து தங்களுடைய கால்நடைகளை கொண்டுவந்து திருக்கோயிலை வலம் வந்து பிரார்த்தனை செலுத்திவிட்டு செல்வது இத்திருக்கோயிலின் சிறப்பம்சமாகும்.