Screen Reader Access     A-AA+
அருள்மிகு சிவயோகநாதர் திருக்கோயில், திருவிசைநல்லூர், திருவிசைநல்லூர் - 612105, தஞ்சாவூர் .
Arulmigu Sivayoga Nathar Temple, Thiruvisainallur, Thiruvisainallur - 612105, Thanjavur District [TM014054]
×
Temple History

தல பெருமை

திருவியலூர் என்னும் க்ஷேத்திரம் சோழ நாட்டிலே காவேரியின் வடகரையில், கும்பகோணத்துக்குக் கிழக்கே 8 மைல் தூரத்தில் உள்ளது. இத்தலத்தில் சிவபெருமான் விஷ்ணுமூர்த்தியுடன் கோவில் கொண்டுள்ளார். இத்தலம் ஆதியில் வில்வகாடாயிருந்தமையால் வில்வனமென்றும், எல்லா சூத்திரங்களுக்கெல்லாம் முன்னர் தோன்றிய பழமையாலும், பிராதளன் என்ற இராக்ஷதன் இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய சந்நிதியில் இறந்து சிவபதம் பெற்றமையால் புராதனபுமென்றும் வழங்கப்படுகிறது. இங்குள்ள சிவேபெருமானுக்கு வல்வனேசஸ்வரர், பிராதனேசுவரர் என்ற பெயரோடு சிவயோகி என்ற முனிபுங்கவரும் அவரது ஏழு சகோதரர்களும் சுவாமியுடன் ஐகியமானதால் அனுக்கிரகஞ் செய்தைமயால் சிவயோகிநாதர் என்னும் திருநாமமும் உண்டு.