Screen Reader Access     A-AA+
அருள்மிகு அரசாபவிமோசன பெருமாள் திருக்கோயில், Kandiyur - 613202, தஞ்சாவூர் .
Arulmigu Arasabavimoshanperumal Temple, Kandiyur - 613202, Thanjavur District [TM014076]
×
Temple History

தல வரலாறு

சிவனுக்கு ஐந்து முகங்கள் இருந்தன. இதேபோல படைப்பு கடவுளான ப்ரம்மதேவனுக்கும் ஐந்து திருமுகங்கள் இருந்தன. அதனால் சிவபெருமானுக்கு ஈடாக தன்னையும் நினைத்து கர்வம் அடைந்திருந்த ப்ரம்மதேவனுடைய ஐந்தாவது முகத்தினை சிவபெருமான் கண்டனம் செய்ய ப்ரம்மனுடைய கபாலம் சிவனுடைய கையில் ஓட்டிக்கொள்ள ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. பரமேஸ்வரன் ப்ரம்மஹத்தி தோஷத்தால் உருமாறி ப்ரம்ம கபாலத்தை கையிலேந்தி தீர்த்த யாத்திரை புறப்பட்டார்.கடைசியாக பரமேஸ்வரன் இத்திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார் ஈஸ்வரன் கிழக்கு திக்கில் உள்ள பத்ம தீர்த்தத்தில் நீராடி ப்ரம்மஹத்தி தோஷத்தினின்றும் விடுபட்டு உத்தமனான தன்னுடைய சுயரூபத்தை அடைந்தார். இத்திருத்தலத்தில் ஹரசாப விமோசன பெருமாள் கமலவல்லி தாயாருடன் இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.