Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரம்மசிரக்கண்டீஸ்வரர் திருக்கோயில், கண்டியூர், கண்டியூர் - 613202, தஞ்சாவூர் .
Arulmigu Biramaserakandieswar Temple, Kandiyur - 613202, Thanjavur District [TM014077]
×
Temple History

தல வரலாறு

சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸ்த்யோஜாதம் என்று ஐந்து திருமுகங்கள் இருப்பது போன்றே முற்காலத்தில் நான்முகனும் ஐந்து திருமுகங்களை பெற்றிருந்தான். அதனால் தானே படைப்புக் கடவுள் என செருக்குற்றான். அவன் ஆணவத்தை அடக்க சிவபெருமான், பைரவரைப் படைத்து அவரைப் பிரம்மாவின் மேல் ஏவி, பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்து வருமாறு பணித்தார். பைரவரும் தமது இடக்கை நக நுனியால் பிரம்மனது ஐந்தாவது தலையைக் கொய்தார். அத்தலை அப்படியே அவரது கையில் ஒட்டிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷமானது. எனவே சிவபெருமான் பைரவரைப் பார்த்து, இத்தீவினைத் தீர நீ ஊர்தோறும் பிச்சையேற்க வேண்டும் என்று கூற, பைரவரும் பல திருத்தலங்களுக்குச் சென்று பிச்சையேற்றுத் திரிந்தார். கடைசியில் இத்தலத்திற்கு வந்தபோது, பிரம்மனின் தலை கையை விட்டகன்றது....