Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வர சுவாமி திருக்கோயில், Vilangudi - 613204, தஞ்சாவூர் .
Arulmigu Abathsakaeswara Temple, Vilangudi - 613204, Thanjavur District [TM014078]
×
Temple History

தல வரலாறு

தன்னைத்தானே பூஜை அன்று திருவையாறு அய்யாரப்பருக்கு 5 ம் நாள் திருவிழா சப்தஸ்தானம் அன்று சுவாமிக்கே சுவாமி பூஜை செய்த காட்சி இன்றளவும் நடந்து வருகிறது. திருவையாறு சிவாச்சாரியாருக்கு காசி போக வேண்டும் என்று எண்ணம் வந்தது. ஆகையால் அரசனிடம் அனுமதி பெற்று காசிக்கு சென்று விசுவநாதர் விசாலாட்சியை தரிசனம் செய்துவிட்டு வரும் வழியில் திருமானுர் என்னும் ஊர் உள்ளது. அந்த ஊரில் 1 கிமீ. அளவு தண்ணீர் ஓடுவதால் குருக்களால் ஐய்யாரப்பருக்கு பூஜை செய்ய வர முடியவில்லை. திருமானுர் ஆற்றங்கரையிலிருந்து அர்ச்சகர் மனமுருகி வேண்டியதை கேட்ட சிவபெருமான் அர்ச்சகர் வேடத்தில் வந்து திருவையாறு ஐய்யாரப்பருக்கு பூஜை செய்தார். அர்ச்சசகரை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் ஆபத்சகாயேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது.