அருள்மிகு சுந்தரராஜபெருமாள் திருக்கோயில், Perumpuliyur - 613203, தஞ்சாவூர் .
Arulmigu Suntharaja Perumal Temple, Perumpuliyur - 613203, Thanjavur District [TM014079]
×
Temple History
தல வரலாறு
தஞ்சை மாவட்டத்தில் பொன்னியாற்றின் வடகரையில் திருவையாற்றிக்கு மேற்கே இரண்டு கல் தொலைவில் பெரும்புலியூர் எனும் திருப்பதியில் புருடருள் திருமால் போலும் என்று போற்றிப் பேசப்படுகின்ற எப்பெருமான் அழகு அரசன் எனும் திருநாமம் தாங்கி கோயில் கொண்டு அன்பர்கட்கு அருள்பாலிக்கின்றார். இப்புராதான புண்ணியத்தலத்தைப் பக்திசாரர் எனும் சிறப்புப்பெயர் பெற்ற திருமழிசை ஆழ்வார் பாடிப் பரவசமடைந்துள்ளார். இது தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகவும் உள்ளது. இங்குக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் திருவடிகளில் கருவறையில் ஆண்டுக்கு இரண்டு தடவை சூரிய கிரணங்கள் உள்புகுந்து படரும் அழகைக் கண் கொண்டு காண வேண்டும் என்பர். இந்தப் புராதன புண்ணிய ஷேத்திரத்தில்தான் திருமழிசை ஆழ்வார் பெருமானை தன் இட்ட வழக்காக உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே...தஞ்சை மாவட்டத்தில் பொன்னியாற்றின் வடகரையில் திருவையாற்றிக்கு மேற்கே இரண்டு கல் தொலைவில் பெரும்புலியூர் எனும் திருப்பதியில் புருடருள் திருமால் போலும் என்று போற்றிப் பேசப்படுகின்ற எப்பெருமான் அழகு அரசன் எனும் திருநாமம் தாங்கி கோயில் கொண்டு அன்பர்கட்கு அருள்பாலிக்கின்றார். இப்புராதான புண்ணியத்தலத்தைப் பக்திசாரர் எனும் சிறப்புப்பெயர் பெற்ற திருமழிசை ஆழ்வார் பாடிப் பரவசமடைந்துள்ளார். இது தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகவும் உள்ளது. இங்குக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் திருவடிகளில் கருவறையில் ஆண்டுக்கு இரண்டு தடவை சூரிய கிரணங்கள் உள்புகுந்து படரும் அழகைக் கண் கொண்டு காண வேண்டும் என்பர். இந்தப் புராதன புண்ணிய ஷேத்திரத்தில்தான் திருமழிசை ஆழ்வார் பெருமானை தன் இட்ட வழக்காக உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே என்று பக்தியேவல் இட்டார். இந்த புண்ணிய ஷேத்திரம் தன் இருக்கும் இடம் தெரியக்காட்டாமல் கொள்ளிடக் கரையோரமாக அமைந்திருப்பதால் பல பக்தர்கள் இத்தலத்தைக் கண்டு பிறவிப்பயன் எய்தவும், பெருமைதனையறிந்து வழிபடவும் பாங்காக இத்தலத்தின் சிறப்பைப் பெற்றது.