தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் கண்டமங்களம் கிராமம் அருள்மிகு கைலாசநாதர் சுவாமி திருக்கோயில் , குடமுருட்டி ஆற்றின் தென்புறம் அமைந்துள்ளது. திருக்காட்டுப்பள்ளி இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் , தஞ்சாவூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இத்திருக்கோயில் பிற்கால திராவிட பாணியில் அமைந்தது. 16-ஆம் நூற்றாண்டை சார்ந்தது. திருக்கோயில் கற்றளி கோயிலாகும். இதன் வரலாற்றை முழுமையாக அறியப்படவில்லை.