Screen Reader Access     A-AA+
அருள்மிகு வாத்தலைநாச்சியம்மன் திருக்கோயில், Kandamangalam - 613104, தஞ்சாவூர் .
Arulmigu Vathalainachi Amman Temple, Kandamangalam - 613104, Thanjavur District [TM014084]
×
Temple History

தல வரலாறு

நீர் வளம் நிலவளம் பொருந்திய இச்சோழ வளநாட்டில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அடித்து வரப்பெற்று குடமுருட்டி ஆற்றங்கரையில் தென்பகுதியில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் கண்டமங்கலம் கிராமத்தில் என்றகோயில் கொண்டு எழுந்தளிருக்கும் அருள்மிகு வாத்தலை நாச்சியம்மன் வெங்கடசமுத்திரம் கண்டமங்கலம் கிராமத்தின் கிராம தேவதையாகவும் கேட்பவர்களுக்கு கேட்கும் வரம் அளிக்கும் கருணை கடலாகவும், ஒரு கையில் தனவாசூரனை கிளியாகவும், ஒரு கையில் உடுக்கையும், ஒரு வகையில் பாசக்கயிறும், ஒரு கையில் அன்ன கிண்ணத்தையும், ஏந்தி ஆதிசக்தியின் அம்சமாய் விளங்கும் ஆதிபராசக்தி வாத்தலை நாச்சி அம்மன், வராகி அம்மன், முத்தாளுராவுத்தர், மதுரை வீரன் என்ற பரிவார மூர்த்திகள் புடைசூழ அருள்பாலித்து வருகிறான்