Screen Reader Access     A-AA+
அருள்மிகு பங்காரு காமாட்சியம்மன் திருக்கோயில், Thanjavur - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Bangaru Kamachiamman Temple, Thanjavur - 613009, Thanjavur District [TM014086]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயிலின் மூலவர் அம்பாள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயிலின் உற்சவ விக்ரகமாக இருந்து வந்தது. இந்த உற்சவ விக்ரகம் முழுவதும் சொர்ணத்தால் ஆனதாக கூறப்படுகிறது. 17 ஆம் நுற்றாண்டில் முகலாயர்கள் படையெடுப்பின் போது விக்ரகத்தை பாதுகாக்கும் பொருட்டு பூஜை செய்து வந்த ஸ்தானீகர்களால் காஞ்சிபுரத்திலிருந்து கால்நடைகளாக தோளில் சுமந்து செஞ்சி, உடையார்பாளையம், திருவாரூர் வழியாக தஞ்சாவூர் எடுத்து வரப்பட்டது. 17 ஆம் நுற்றாண்டில் இறுதியில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களில் ஒருவரான துளஜேந்திர ராஜா என்பவரால் தஞ்சையில் புதிதாக திருக்கோயில் எழுப்பப்பட்டு அம்பாள் இங்கே வைக்கப்பட்டு வழிபாடு நடைப்பெற்று வருகிறது.

தல பெருமை

இந்த அம்பாள் காஞ்சி காமாக்ஷி அம்பாளூடைய உத்ஸவ விக்ரகங்கள் ஆகும். இந்த விக்ரகம் 17ம் நூற்றாண்டில் முகலாயா் படையெடுப்பின் போது பாதுகாப்பு கருதி காஞ்சியிலிருந்து எடுத்து வரப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சி காமாக்ஷி அம்மன் சந்நிதிகளின் வாயிலில் ஒ௫புறம் செளபாக்ய கணபதியும் மறுபுறம் சுப்பிரமண்ய சுவாமியும் காட்சியளிக்கின்றனா். இங்கு எழுந்த௫ளி இ௫ந்த ஸ்வா்ண காமாக்ஷியே தஞ்சையில் பங்கா௫ காமாக்ஷி எனப் புகழ்பெற்று விளங்குகிறாள். ஆதியில் பிரம்மாவினால் செய்விக்கப் பெற்ற பொன் விக்ரகம் அது. தெலுங்கில் பங்கா௫ என்றால் தங்கம் என்று பொருள்.