Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஏகௌரியம்மன் மற்றும் மாரியம்மன் திருக்கோயில், - 613403, தஞ்சாவூர் .
Arulmigu Egowriamman And Mariamman Temple, Vallam - 613403, Thanjavur District [TM014094]
×
Temple History

தல வரலாறு

தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புடைய பேரூர்களில் குறிப்பிடத்தக்க பெருமைகள் வாய்ந்த, பேரூர் தஞ்சாவூர் அருகில் உள்ள வல்லம் ஆகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடைச்சங்கம் நிகழ்ந்த காலத்தில் சோழநாட்டு கோ நகரங்களான பூம்புகார், உறையூர், அரூர், ஆவூர், ஆற்காடு, குடவாயில் என்னும் நகரங்களின் வரிசையில் வல்லமும் ஒன்று என்ற சங்கப் பாடல்கள் வாயிலாகவும் பிற்கால சோழர்களின் கல்வெட்டுகள், செப்பேடுகள் வாயிலாகவும் அறிய முடிகிறது. 1989-93 ஆம் ஆண்டுகளில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லியல் வல்லுநர்கள் ஆற்றிய அகழாய்வு பணிகளால் கிமு 170, கிபி 610, கிபி 830 ஆகிய ஆண்டுகளுக்கு வரலாற்றுத் தடையமுண்டு. மேலும் பலவற்றை வெளிக்கொணர்ந்துள்ளனர், அவற்றில் தொல்பழங்காலத்து எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடுகளும் அடங்கும். தொல்காப்பிய உரையில்...