Screen Reader Access     A-AA+
அருள்மிகு செங்கமலநாச்சியம்மன் திருக்கோயில், - 620102, தஞ்சாவூர் .
Arulmigu Sengamalanachiyamman Temple, Thanjavur - 620102, Thanjavur District [TM014099]
×
Temple History

தல பெருமை

தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரிக்கு மிக அருகில் உள்ளது இந்த சிங்கள நாச்சியார் கோவில். அந்த கோவிலை பற்றிய மேலும் தகவல் அறிய எனது தேடலை தெடங்கினேன் அந்த தேடலின் விழைவாக முதலில் நான் அறிந்தது மிகவும் சுவாரஸ்யமான செவிவழி செய்தி அது என்னவென்றால். தஞ்சையில் ஆட்சி புரிந்த ஒரு சோழ மன்னன் ஒருவன் ஈழத்து அரசன் ஒருவனை பலமுறை அழைத்தும் அவன் வராமல் அவமரியாதை செய்ததாகவும். இறுதியில் அவன் தன குடும்பத்தோடும் சில காவல் வீரர்களோடும் வந்ததாகவும், பேரரசர் மிது உள்ள பயத்தில் மற்றவர்களை தஞ்சைக்கு வெளியே இந்த காட்டில் இருக்கவைத்து விட்டு தான் மட்டும் மன்னனை சந்திக்க...