தல பெருமை
விநாயகர் தலைவர்களுக்கெல்லாம் மேலானவர் எனப் பொருள் கொண்டவர். நாயகர் - தலைவர், வி- மேலான தலைவர், இவர் சிவபெருமானுடைய பக்தி கணங்கள், கணம்-குரு, அனைவருக்கும் தலைவராக இருப்பதால் இவரை கணபதி என்று அழைக்கிறோம். விக்கினங்களை நீக்கி செல்வங்கள் அருளுபவர் என்பதால் விக்ன - ஈஸ்வரர் விக்னேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இவர் துதிக்கை உட்பட ஐந்து கரங்கள் கொண்டவராகவும், ஆனை முகத்துடன் இருப்பவராகவும், அழகிய இளம்பிறை போன்ற அமைப்புடையவரும், நந்தி தேவரின், சிவபெருமான், புதல்வராகவும் அறிவுகளின் கொழுந்தாகவும் இருக்கும் இவரை நமது சிந்தனையில் வைத்து வழிபட வேள்டும்.இத்திருக்கோயில் உடையார் கோயிலில் அமைனந்துள்ளது