Screen Reader Access     A-AA+
அருள்மிகு துர்க்கையம்மன் திருக்கோயில், Palathali - 614602, தஞ்சாவூர் .
Arulmigu Durgaiamman Temple, Palathali - 614602, Thanjavur District [TM014135]
×
Temple History

தல வரலாறு

ஒரு காலத்தில் பால மரங்கள் அடர்ந்த வனமாக இருந்தது இப்பகுதி. வனத்திற்கு அருகில் இருந்த ஊர் பொது மக்கள் பசுக்கயை பால மர வனத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். ஒரு கட்டத்தில் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் பசுக்களின் மடி பாலின்றி இருந்தன. இதில் குழம்பி போனவர்கள் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டி செல்பவர்களே பாலை கறந்து விடுகிறோர்களோ என சந்தேகப்பட்டு அவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென கருதி ஊர்மக்கள் ஒரு நாள் ரகசியமாக மேய்ச்சலுக்கு செல்பவர்களை பின்தொடர்ந்தனர். அப்போது பசுக்கள் மேடான ஒருஇடத்தில் நின்று கொண்டு தாமாகவே பாலை சொறிவதை கண்டு அதிர்ந்தனர். உடனே அனைவரும் ஒன்று கூடி அந்த மேட்டு பகுதியை தோண்ட அகிருந்து வெளிப்பட்டது அழகிய கல் விக்ரகம். அதனை...