அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், Karambayam - 614626, தஞ்சாவூர் .
Arulmigu Muthumariamman Temple, Karambayam - 614626, Thanjavur District [TM014140]
×
Temple History
தல பெருமை
இத்தலத்தில் யாதவர் ஓருவர் அம்மை நோயால் அவதியுற்று ஸ்ரீமுத்துமாரியம்மன் கருணையால் நோய் நீங்கப்பட்டமையால் பக்தர்கள் யாவரும் தங்களை வருத்தும் அம்மைநோய் தீர்க்க அம்பாளை வணங்கி நலன் அடைந்து வருகிறார்கள் நினைத்ததை நினைத்தபடி அருள்பாலிப்பவள் அருள்மிகு முத்துமாரியம்மன் . இத்தலம் பழங்காலத்தில் கல்லும் கரம்பையுமாக இருந்ததால் கறம்பயம் என ஊர் பெயர் வந்தது கரம்பை வழியாக யாதவன் ஒருவன் தினமும் ஆவின் பாலை வேற்றுரருக்கு கொண்டு செல்வது வழக்கம் ஒரு நாள் அம்பாள் எழுந்துள்ள இடம் வந்ததும் கால்தவறி பாலை கொட்டிவிட்டான் வருத்தத்துடன் வீடு திரும்பிவிட்டான் ...இத்தலத்தில் யாதவர் ஓருவர் அம்மை நோயால் அவதியுற்று ஸ்ரீமுத்துமாரியம்மன் கருணையால் நோய் நீங்கப்பட்டமையால் பக்தர்கள் யாவரும் தங்களை வருத்தும் அம்மைநோய் தீர்க்க அம்பாளை வணங்கி நலன் அடைந்து வருகிறார்கள் நினைத்ததை நினைத்தபடி அருள்பாலிப்பவள் அருள்மிகு முத்துமாரியம்மன் . இத்தலம் பழங்காலத்தில் கல்லும் கரம்பையுமாக இருந்ததால் கறம்பயம் என ஊர் பெயர் வந்தது கரம்பை வழியாக யாதவன் ஒருவன் தினமும் ஆவின் பாலை வேற்றுரருக்கு கொண்டு செல்வது வழக்கம் ஒரு நாள் அம்பாள் எழுந்துள்ள இடம் வந்ததும் கால்தவறி பாலை கொட்டிவிட்டான் வருத்தத்துடன் வீடு திரும்பிவிட்டான் மறு நாள் வழக்கம் போல் பால் கொண்டு வந்தான் அந்தாநாளும் சென்ற நாளை போல் பாலை கொட்டினான்
அன்றும் வருத்தத்துடன் வீடு திரும்பினான் மூன்றாம் நாள் பால் கொண்டு கால் இடறிய இடத்தை வெட்டினான் அவ்விடத்தில் இருந்து இரத்தம் பீறிட்டு எழுந்தது அவனது மெய்யல்லாம் செம்முத்துக்கள் போன்று படிந்ததும் போது கல்லில் வெட்டியது போன்று ஒளி கேட்டது மீண்டும் வெட்டினான் உடனே செம்முத்துக்கள் போன்று இரத்தம் அந்த யாதவன் உடம்பெல்லாம் தற்காலத்தில் மக்கள் அலைக்கும் அம்மைநோயாக மாறிவிட்டது அம்மையின் வெம்மை தாங்கமுடியாத யாதவன் பெரும் குரலில் கத்தினான் மக்கள் கூட்டம் வந்து அவனையும் அவன் வெட்டிய இடத்தையும் கண்டனர் உடனே அவ்வூர் தலைவர் சில ஆட்களை கொண்டு கீழே இருந்த கல்லை தோண்ட அது ஒரு சிலையாக காட்சியளித்தது அந்த சிலை இப்போது இத்திருக்கோயிலின் மூலவராக உள்ளது யாதவனால் வெட்டப்பட்ட தழும்புகள் அம்பாளின் முன்கையிலும் இடது தோளிலும் மார்பிலும் இன்னும் காணப்படுகிறது