தல வரலாறு
இவ்வூரில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கோயில் கொண்டு அமர்ந்து அருள்பாலிப்பவர்கள் அன்னை அருள்மிகு மாரியம்மன். இவள் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தருபவள். இவள் நோயுற்றவருக்கு நோய் நீக்கி உடல் நலம் தருபவள். அம்மை கண்டவர்கள் இத்திருக்கோயிலில் வந்து ஒருசில நாட்கள் தங்கி உடல் நலம்பெற்று வீடு திரும்புவது, நாம் இங்கு கண்கூடாக காணக்கூடியது. உப்பை காணிக்கையாக பெறும் ஒரே ஸ்தலம் இத்தலமாகும் இங்க வீற்றிருக்கும் அன்னை துஷ்டர்களை அடக்கக் கூடிய ஆங்கார நாயகி ஆனாலும், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு உடல் நலத்தையும, உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்து குளிர்ச்சி தருபவள். இத்திருக்கோயில் மிகவும் பழமையான திருக்கோயிலாகும். சமயபுரம் ஏழுர் மாரியம்மனின் கடைசி தங்கையாக இருந்து அருள்பாளிக்கிறார்.