Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஒதனவனேஸ்வரர் திருக்கோயில், Thiruchothurai - 613202, தஞ்சாவூர் .
Arulmigu Othanaeswarar Temple, Thiruchothurai - 613202, Thanjavur District [TM014149]
×
Temple History

தல வரலாறு

சோழநாடு சோறுடைத்து என்ற வாக்குக்கிணங்க விளங்கும் ஒரே திருவூர் திருச்சோற்றுத்துறை என்னும் திருவூராகும். இத்தலத்தை பிரம்மா, மகாவிஷ்ணு, இந்திரன், கவுதம மகரிஷி, சூரியன், அருணகிரிநாதர் மற்றும் வள்ளலார் ஆகியோர் வழிபட்டுள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டு இந்திரன் பதவி பெற்றான், கவுதமர் முக்தி பெற்றார். இங்கு முருகப்பெருமான் ஆறுமுகம் பன்னிரெண்டு கரங்களுடன் சுமார் 8 அடி உயரத்தில் மிகவும் அழகான மூர்த்தமாக ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் காட்சி அளிக்கிறார். சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு பல திருப்பணிகளை செய்துள்ளனர். மேலும் இக்கோயிலுக்கு பல மன்னர்கள் திருவிளக்கெரிக்கவும், நெய்வேத்தியத்திற்க்காகவும், பல விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்தியினை கோயிலில் உள்ள பல கல்வெட்டுக்களின் மூலம் அறியலாம்.